“ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்”?… மறுப்பு சொல்லாத பியூஷ் கோயல்…. பாஜக – தவெக கூட்டணி உறுதியா?… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!!!

By Rajeshwari on பங்குனி 11, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திருச்சியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது சந்திப்பு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பியூஷ் கோயல், திமுக அரசின் மீது கடுமையான ஊழல் புகார்களை முன்வைத்ததோடு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையவுள்ள கூட்டணி ஆட்சியே தமிழகத்திற்கு விடிவை ஏற்படுத்தும் என்றும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

   

இந்தச் சந்திப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு முக்கிய விஷயம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா என்ற கேள்விதான். இதுகுறித்த கேள்விக்கு பியூஷ் கோயல் மறுப்பு தெரிவிக்காமல் மௌனமாகச் சென்றது, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.

   

ஏற்கனவே மத்திய இணை அமைச்சர் எல். முருகன், விஜய் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், விஜய்யுடன் பாஜக ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விஜய்யின் வருகை தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதால், இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.