தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களின் தலைமையில் ஒவ்வொரு தொகுதிகளிலும் இதற்கான விழாவும் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னிலை பெறுவது திமுக என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் முக்கியமாக திமுகவின் அரசியல் எதிரியான அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்து வருவது இபிஎஸ்ஸுக்கு தொடர்ந்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
அதன்படி அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை திமுகவில் இணைக்கும் பணியை செந்தில் பாலாஜி வசம் ஒப்படைத்துள்ளார். இபிஎஸ் மூலமாக வெளியேற்றப்பட்ட பலரும் திமுகவில் இணைந்த நிலையில் அடுத்ததாக செங்கோட்டை என இணைப்பதற்கான முயற்சியை செந்தில் பாலாஜி கையில் எடுத்துள்ளார். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்து வரும் செங்கோட்டையன் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா எதிர்த்த திமுகவில் இணைவாரா என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.
மேலும் திமுகவில் இணைவது போன்ற போக்கை காட்டினால் அதிமுக ஒன்றிணையும் என்ற செங்கோட்டையை நினைக்கிறார் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் கூடிய விரைவில் செங்கோட்டையன் திமுகவில் இணைவார் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளனர். செங்கோட்டையன் திமுகவில் இணைவாரா இல்லையா என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் செங்கோட்டையனின் நிலைபாடு 2026 தேர்தலை மாற்றி அமைக்கும் என்று தெரிகிறது.
