vjs

கேரக்டர் ரோலை தேர்ந்தெடுக்கும் முன்னணி நடிகர்கள்.. நண்பனுக்காக கொள்கையை உதறி தள்ளிய விஜய் சேதுபதி..

By admin on மார்கழி 10, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இந்த வருடம் நல்ல நல்ல படங்கள் வெளிவந்திருக்கிறது. வசூலையும் குவித்து இருக்கிறது என்று சொல்லலாம். விஜய் சேதுபதி நடித்த மகாராஜா சிவகார்த்திகேயன் நடித்த அமரன் மாரி செல்வராஜின் வாழை போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

   

அதுமட்டுமல்லாமல் லப்பர் பந்து திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. மிகவும் லைட்டான படமாக இது இருந்தது. ஹரிஷ் கல்யாணின் நடிப்பும் பாராட்டுக்குரியதாக இருந்தது.

   

சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்து வருகிறார்கள். விஜய் சேதுபதி மாதவன் ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் சூர்யா கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள். தற்போது நாம் கேள்விப்பட்டிருக்கும் செய்தி SK25 படத்தில் ஜெயம்ரவி வில்லனாக நடிக்க இருக்ககிறார் என்பது நமக்கு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

அதுபோல தற்போது ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45 திரைப்படத்தில் விஜய் சேதுபதியை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கேட்டிருக்கிறார்களாம். அவரும் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டு இருக்கிறார். விரைவில் சூட்டிங்கில் இணைவார் என வலைப்பேச்சு சேனலில் கூறியிருக்கிறார்கள்.

இது ஒரு பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி தான். ஏனென்றால் விஜய் சேதுபதி நான் இனிமேல் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் எந்த ஒரு படத்திலும் கேமியோ ரோலிலோ வில்லனாகவோ நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்தார். தற்போது சூர்யா போன்ற முன்னணி நடிகர் படத்தில் கேரக்டர் கதாபாத்திரத்தில் இவர் எப்படி நடிப்பார் இவர்கள் காம்போ எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது மட்டுமல்லாமல் லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்திலும் மாதவன் ஒரு முக்கிய கதாபாத்திராத்தில் நடிக்கிறார். அதனால் சினிமா ரசிகர்கள் என்ன இது முன்னணி கதாநாயகர்கள் அனைவரும் கேரக்டர் ரோலில் நடிக்க வந்து விட்டனரே என்று பேசி வருகின்றார்கள்.