தம்பி ராமையா தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் நகைச்சுவை நடிகர் குணச்சித்திர நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தொடக்க காலத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த தம்பி ராமையா மலபார் போலீஸில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து மனுநீதி பம்பரக்கண்ணாலே சக்திவேல் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானார். இது தவிர கும்கி திரைப்படத்தில் நடித்தது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து சாட்டை சாட்டை 2 அப்பா ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்புக்காக வெகுவாக பாராட்டப்பட்டார்.
தம்பி ராமையா 2000 ஆம் ஆண்டு மனுநீதி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். 2008 ஆம் ஆண்டு வெளியான இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற வடிவேல் நடித்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் தம்பி ராமையா என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் 2018 ஆம் ஆண்டு இவரது மகன் உமாபதியை நாயகனாக வைத்து மணியார் குடும்பம் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார் தம்பி ராமையா.
தம்பி ராமையாவின் மகன் உமாபதி தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து இருக்கிறார். தற்போது ராஜாக்கிளி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் தம்பி ராமையா. இந்த திரைப்படத்தின் நேர்காணலில் உமாபதியோடு கலந்து கொண்டிருக்கும் போது உமாபதி சொன்ன வார்த்தையால் கண்கலங்கி தேம்பி அழுதிருக்கிறார் தம்பி ராமையா.

உமாபதி கூறியது என்னவென்றால் எனது பாட்டி இறந்துட்டாங்க அப்போ என்னுடைய அப்பா சித்தப்பா எல்லாரும் அழுதாங்க. அழும்போது எங்க அப்பா சித்தப்பாவை பாத்து நாமெல்லாம் அனாதை ஆயிட்டோமடா அப்படிங்கிற வார்த்தை சொன்னார். அதை கேட்ட உடனே எனக்கு அம்மாவுக்கு அக்கா கூட ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அந்த வார்த்தையை ஏன் சொல்றாரு அதான் நாமெல்லாம் இருக்கோமே அப்படின்னு நினைச்சோம். அதுக்கு பிறகு அவர் நிலைமையில் இருந்து பார்க்கும்போதுதான் எங்களுக்கு ஏன்னு புரிஞ்சது என்று கூறினார். இதை கேட்ட உடன் தானது அம்மா நினைவால் அழத் தொடங்கிவிட்டார் தம்பி ராமையா.
