தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5  திரைப்படங்கள்… இரண்டே வாரத்தில் 3-வது இடத்தை தட்டி தூக்கிய ஜெயிலர்… இரண்டே வாரத்தில் இத்தனை கோடியா?…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, மிர்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

தற்போது ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. ஒரே வாரத்தில் உலக அளவில் 375.40 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே வாரத்தில் எந்த அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வசூல் செய்ததில்லை

தற்பொழுது இத்திரைப்படம் தமிழக அளவில் வசூல் செய்த புள்ளி விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 468 கோடியும், தமிழக அளவில் 147 கோடியும் வசூல் செய்துள்ளது. மேலும் ஆந்திர பிரதேசத்தில் 59 கோடியும், கேரளாவில் 40 கோடியும், கர்நாடகாவில் 52 கோடியும் வசூல் செய்துள்ளது.

தமிழகத்தில் வெளியான சில வாரத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படங்களில் முதலிடத்தை பொன்னியின் செல்வன் part 1 – 222 கோடி  , 2- வது இடத்தை விக்ரம் – 182 கோடி , 3- வது இடத்தை பாகுபலி – 146 கோடி, 4- வது இடத்தை வாரிசு- 144.50 கோடி, 5- வது இடத்தை மாஸ்டர்- 142 கோடி பிடித்திருந்தது.

இந்நிலையில் வெளியான இரண்டே வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 147 கோடி வசூல் செய்து பாகுபலியை பின்னுக்கு தள்ளி 3 – வது இடத்தை பிடித்துள்ளது ஜெயிலர் திரைப்படம். இதைத்தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தை ரசிகர்கள் தற்பொழுதும் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.