சீரியல் நடிகை காயத்ரி வீட்டில் நடந்த மற்றுமொரு விசேஷம்… ஒன்று கூடிய மொத்த குடும்பம்…வெளியான புகைப்படங்கள் &வீடியோ…

By Begam on ஏப்ரல் 29, 2024

Spread the love

சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை காயத்ரி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இந்த சீரியலை தொடர்ந்து தென்றல் நிலா, அரண்மனைக்கிளி போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்தார்.

   

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி. இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் அவர் தனது சொந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி.

   

 

நடிகை காயத்ரி யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு  ஒரு மகனும் உள்ளார். சமீபத்தில் இவருக்கு இரண்டாவது பெண் குழந்தையும் பிறந்தது.  இவர் சொந்தமாக சமீபத்தில் டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கினார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்ய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறினர்.

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

தற்பொழுது இவர் தனது செல்ல மகளின் அன்னப்பிரசன்னம் தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்துள்ளார். அன்னப்பிரசன்னம் என்பது பிறந்த குழந்தைக்கு முதன்முதலாக 7 அல்லது 8 மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நாம் சாப்பிடும் உணவான அரிசி சாப்பாடு போன்ற பல்வேறு உணவுகளை டேஸ்ட் செய்ய கொடுக்கும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.