TRB-யில் செம மாஸ் காட்டிய சுந்தரி.. இந்த வாரம் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் லிஸ்ட்..!

By Nanthini on மார்கழி 12, 2024

Spread the love

சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருவதால் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்கள் அதிக அளவிலான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த சீரியல்களுக்கு தற்போது டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் 7 நாட்களும் ஒளிபரப்பி வருகிறார்கள். ஒரு சீரியல் எந்த அளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுகிறது என்பதை டிஆர்பி மூலம் தான் கண்டறிய முடியும். அதன்படி இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

முத்துவிடம் சிக்கிய மனோஜ், கோபி மீது கோபத்தில் குடும்பத்தினர்,  பாக்கியலட்சுமி,சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன? |  Tamilstar

   

அதில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கோபி பாக்கியாவின் அருமையை புரிந்து கொண்டு மனம் மாறுகிறார். இதனால் விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் பின் தங்கி 9வது இடத்தில் உள்ளது. அடுத்து சரிவை சந்தித்துள்ள சிறகடிக்க ஆசை சீரியல் 8வது இடத்தை பிடித்துள்ளது. இந்த மூன்று விஜய் டிவி சீரியல்கள் மட்டுமே டிஆர்பி யில் இடம் பிடித்துள்ள நிலையில் மற்ற ஏழு இடங்களையும் சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்துள்ளன.

   

Marumagal - Best Scenes | 28 Aug 2024 | Tamil Serial | Sun TV - YouTube

 

 

அதன்படி கடந்த வாரம் ஐந்தாவது இடத்திலிருந்து மருமகள் சீரியல் இந்த வாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக ராமாயணம் சீரியல் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. சன் டிவியில் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வரும் புது சீரியல் அன்னம் டிஆர்பி யில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

சிங்க பெண்ணே சீரியல் அன்புக்கு கல்யாணம்.. மணப்பெண் விஜய் டிவி கதாநாயகி  தான்.. யாருன்னு தெரியுமா? | singappenne serial Anbu's love to Kanne  Kalamane Serial Actress Pavitra ...

இதனைத் தொடர்ந்து இந்த லிஸ்டில் முதல் நான்கு இடங்கள் அதிரடி மாற்றங்களை கண்டுள்ளன. அதன்படி கடந்த வாரம் இரண்டாவது இடத்திலிருந்து சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் இடத்தில் இருந்த மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

கயல் சீரியலை விட்டு விலகிய முக்கிய பிரபலம்? – News18 தமிழ்

அதனைப் போலவே கடந்த வாரம் டிஆர்பியில் மூன்றாவது இடத்தில் இருந்த கயல் சீரியல் இந்த வாரம் முன்னேறி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் இந்த பட்டியலில் முதலிடத்தை கையல் அல்லது சிங்க பெண்ணே ஆகிய சீரியல்கள் பிடித்து வரும் நிலையில் இந்த வாரம் அதிரடியாக சுந்தரி சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Sundari Serial Actress gabriella sellus announced her Pregnancy : சுந்தரி  சீரியல் முடிந்த கையோடு குட் நியூஸ் சொன்ன கேப்ரியல்லா! குவியும் வாழ்த்துக்கள்

இந்த சீரியலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ள நிலையில் சுந்தரி சீரியல் கடந்த வாரத்துடன் முடிவடைந்ததால் அதன் கிளைமாக்ஸை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி இருப்பது இதன் மூலமாக தெரிய வந்துள்ளது. முதல் இடத்தைப் படித்த கையோடு கெத்தாக முடிந்தது சுந்தரி சீரியல்.