mgr

MGR வீட்டு வாசலில் நின்ற சுதந்திர போராட்ட தியாகியின் மனைவி… அதிர்ச்சியில் உறைந்த புரட்சி தலைவர்…

By admin on மார்கழி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. அரசியலிலும் சினிமாவிலும் தனக்கான தனிப்பாதை வகுத்து அதன் வழி நடந்தவர் MGR. மக்கள் மனதில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் MGR.

   

குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் நடிகராக உயர்ந்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் க்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.

   

தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். மக்களுக்கான ஆட்சியாக அது இருந்தது.

 

MGR நல்ல குணம் கொண்டவர். உதவும் மனப்பான்மை கொண்டவர். வாரி கொடுக்கும் வள்ளல். அப்படி ஒரு முறை எம்ஜிஆர் வீட்டு வாசலில் மனு கொடுக்க வந்த பலருக்கு நடுவில் ஒரு பெண்மணி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் எம்ஜிஆர். அந்தப் பெண்மணி சுதந்திரப் போராட்ட தியாகியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கக்கனின் மனைவி ஆவார்.

அவரை அழைத்து என்னவென்று விவரம் கேட்ட எம்ஜிஆர் அந்த பெண் நாங்க வறுமையில் இருக்கோம் எங்க வீடு ஜப்திக்கு வர்ற நிலைமை ஆயிடுச்சு என்று கூறும்போது உடனே அவர்களது கடனை கட்டி புது வீடு கட்டி கொடுத்தார் எம் ஜி ஆர். அது மட்டுமில்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் என்று 500 ரூபாய் கொடுக்க அரசாணை வெளியிட்டார். கக்கனின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். இப்படி தனக்கு தெரிந்தவர்களை எல்லாம் வாழ வைத்திருக்கிறார் எம்ஜிஆர்.