“செயற்கை நுண்ணறிவு முதல் தாய்மாமன் சீர் வரை….” தமிழக பட்ஜெட் 2026-ன் டாப் 10 மாஸ் திட்டங்கள்…!!

By Devi Ramu on ஆவணி 5, 2026

Spread the love

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் திட்டம்’, பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ மற்றும் கருவுற்ற பெண்களுக்கான ‘தாய் கேர்’ போன்ற சமூக நலத் திட்டங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. மேலும், பள்ளிகளில் தூய்மையைப் பராமரிக்கும் ‘சூப்பர் க்ளீன்’ திட்டம், ஹெல்மெட் வசதியுடன் கூடிய நவீன மிதிவண்டிகள், கல்லூரி மாணவர்களுக்கு ‘வெற்றி மடிக்கணினி’ மற்றும் முதியோர்களுக்காக 1,000 நடமாடும் மருத்துவ மையங்கள் அமைக்கும் அறிவிப்புகளும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

இவற்றுடன், எதிர்காலத் தொழில்நுட்பத்தைக் கருத்தில் கொண்டு ‘அறிவகம்’ எனும் பெயரில் இந்தியாவின் முதல் ஏஐ நகரம் தமிழகத்தில் உருவாக்கப்பட உள்ளது. சுமார் 5 லட்சம் மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிகள் வழங்குதல், தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் மற்றும் ‘தமிழ்ப்பெருந்திரள் மொழி மாதிரி’ உருவாக்குதல் போன்ற ஏஐ சார்ந்த புதுமையான அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், ஆதிதிராவிடப் பெண்களுக்கு நில உரிமை வழங்கும் ‘மண்ணின் மகள் திட்டம்’ மற்றும் திருநங்கைகளுக்கான மறுவாழ்வு இல்லங்கள், சுயதொழில் மானியங்கள் என அனைத்துப் பிரிவு மக்களின் மேம்பாட்டையும் உறுதி செய்யும் வகையிலான சிறப்பம்சங்கள் இப் வரவு செலவுத் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.