நீங்க தினமும் உங்க டூத் பிரஷை பாத்ரூமில் வச்சிருக்கீங்களா?… அப்போ இந்த நோய்கள் கண்டிப்பா வரும்…!

Spread the love

காலை எழுந்ததும் அனைவரும் செய்யக்கூடிய முதல் வேலை பல் துலக்குவது தான். வாயை சுத்தமாக வைப்பதற்கு தான் தினம்தோறும் தவறாமல் பல் துலக்குகிறோம். ஆனால் அதுவே பல கிருமி தொற்றுகளுக்கு காரணமாகலாம். அதாவது நீங்கள் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷில் பல கிருமிகள் ஒளிந்திருக்கும். நீங்கள் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷ்சை கழிவறையிலேயே வைத்து விடுகிறீர்கள் என்றால் இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். பெரும்பாலானோர் செய்யக்கூடிய தவறு கழிவறைக்கு அருகிலேயே டூத் பிரஷ்சை வைத்து விடுவது தான். நாம் பிரஷ் செய்யும்போது மிகவும் ஆபத்து வாய்ந்த பாக்டீரியாக்கள் அங்குள்ள காற்றில் பரவி அருகில் உள்ள பொருட்கள் மீது படர வாய்ப்புள்ளது. அந்த கிருமிகள் பெருகி நோயை பரப்புகின்றன.

அதனை நாம் பயன்படுத்தும் போது கிருமித் தொற்றுக்கு ஆளாகிறோம். பிரஷ்சை பயன்படுத்திவிட்டு அப்படியே ஈரமாக வைத்து விடுகிறோம். பலர் பிரஸ்ஸின் மேல் பகுதியை மூடி விடுகிறார்கள். இதுவும் கிருமிகள் வளர்வதற்கு ஏற்றது தான். டூத் பிரஷ்சை பயன்படுத்தும் முன்பு கழுவ வேண்டும். அதனைப் போலவே பயன்படுத்திய பிறகும் காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். குறிப்பாக கழிவறைக்கு வெளியே தான் நல்லது. அது மட்டுமல்லாமல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நீங்கள் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷ்சை மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் துளைகள் மற்றும் மென்மையான நூல்களில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் வளர அதிகம் வாய்ப்பு இருக்கும். எனவே இனிமேல் டூத் பிரஷை கழிவறையில் வைப்பதை தவிர்ப்பது பல நோய்களிலிருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

Nanthini

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

9 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

9 மணத்தியாலங்கள் ago