மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிறக் கார் மற்றும் கடை மீது கவிழ்ந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளன.
அதிவேகமாக வந்த மணல் லாரி, வளைவில் திரும்பும்போது அல்லது எதிர்பாராதவிதமாகக் காரின் மோதலால் நிலைதடுமாறிச் சாலையோரம் கவிழ்ந்துள்ளது. அப்போது லாரியில் இருந்த டன் கணக்கிலான மணல், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிறச் சொகுசு கார் மீதும் கடை வாசலிலும் கொட்டப்பட்டுப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. லாரியின் முன் பக்கக் கண்ணாடி உடைந்த நிலையில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வெளியேறியுள்ளார்.
விபத்து நடந்த சில நொடிகளிலேயே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடோடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தத் திடுக்கிடும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், கனரக வாகனங்களை வளைவுகள் மற்றும் குறுகிய பாதைகளில் ஓட்டும்போது ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடனும் குறைந்த வேகத்திலும் இயக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.
