விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா ஆகியோர் உள்ளனர். கடந்த வாரம் மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோர் வெளியேறினர். போட்டி இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தற்போது டிக்கெட் பினாலே டாஸ்க்கும் நிறைவடைந்து வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டு விட்டார்.
ரயான் பைனலுக்குள் நுழைந்துள்ளார். இந்த நிலையில் முந்தைய சீசன்களை போலவே ஷோவின் இறுதிக்கட்டத்தில் முன்பு எலிமிமினெட் ஆன போட்டியாளர்களை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு கொண்டுவர இருக்கிறார்கள். அந்த வகையில் வீட்டிற்குள் முதல் ஆளாக சுனிதா மற்றும் வர்ஷினி வந்தனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது போட்டியாளர் அர்ணவ் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். ஆனால் வந்ததுமே போட்டியாளர்களை கோபப்படுத்தும் வகையில் அவர் பேசிய நிலையில் சக போட்டியாளர்கள் கோபமடைந்து எழுந்து சென்றனர். அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.