hmpv

இந்தியாவில் பரவும் HMPV வைரஸ்… யாரை பாதிக்கும்… அறிகுறிகள் என்ன… எப்படி கட்டுப்படுத்துவது… முழு தகவல்கள் இதோ…

By admin on தை 7, 2025

Spread the love

2020 ஆம் வருடத்தை யாராலும் மறக்க முடியாது. அப்படி ஒரு பேரழிவை உலகம் சந்தித்தது. சீனாவில் இருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ் என்பது உலகம் முழுவதும் சுற்றி பல இலட்சக்கணக்கான மக்களின் உயிரை வாங்கிவிட்டது என்று சொல்லலாம். 2020 அந்த அலை ஓய்ந்த பிறகு சற்று இளைப்பாறுவதற்கு முன்பாக 2021 இல் மறுபடியும் கொரோனா தொற்று ஏற்பட்டு மறுபடியும் ஒரு அலை வீசிவிட்டு சென்றது.

   

இப்போது மூன்றாவது முறையாக சீனாவில் இருந்து புது வைரஸ் கிளம்பி இருக்கிறது. இதனால் மூன்றாவது கொரோனா அலை போன்று நிலைமை ஏற்படுமோ என்று உலக நாடுகள் அனைத்தும் அச்சம் அடைந்திருக்கிறது. HMPV என்ற புதுவித வைரஸ் ஆனது சீனாவில் பரவி அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைந்து இருக்கிறார்கள். மருத்துவமனையில் இடமில்லாத அளவுக்கு நோயாளிகளின் கூட்டம் பெருகி இருக்கிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்த வைரஸ் ஆனது இந்தியாவிற்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. இதுவரை 2 குழந்தைகள் உட்பட நான்கு பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த வைரஸ் எப்படி பரவுகிறது இதன் அறிகுறிகள் என்ன இதை தடுக்கும் முறைகள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

முதலில் இந்த HMPV வைரஸ் ஆனது 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நுரையீரல் மற்றும் சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களை எளிதாக தாக்குகிறது. குறிப்பாக குழந்தைகளையும் இந்த வைரஸ் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்தாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த HMPV வைரஸ் தாக்கிவிட்டால் அதன் அறிகுறிகள் ஆனது இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு விடுதலில் சிரமம், மூக்கடைப்பு, மூச்சுத் திணறல், நிமோனியா பாதிப்பு ஆகியவை ஆகும். இது போன்ற உடல் உபாதைகள் உங்களுக்கு மூன்று நாட்களுக்கும் மேல் சரியாகவில்லை என்றால் உடனடியாக ரத்தப் பரிசோதனை எடுத்துக் கொள்வது அவசியமானது.

 

HMPV வைரஸ் தொற்று நோய் பாதிக்காமல் இருப்பதற்காக கட்டுப்படுத்தும் வழிமுறைகள் என்னவென்றால் அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களிடம் இருந்து சற்று தள்ளி இருக்க வேண்டும். பொதுவாக பயன்படுத்தக்கூடிய தொலைபேசி மற்ற பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இருமல் தும்மல் போன்ற உபாதைகள் இருக்கும் போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். பொதுவெளியில் கூட்டமான இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது மிகவும் நல்லது. தற்போது தமிழக அரசு மற்றும் பிற அரசுகள் முக கவசம் அணிவது வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். இது போன்ற வழிகளை பின்பற்றும்போது HMPV வைரஸ் நோய் தொற்றில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும்.