“கூட்டணியா விளையாடுறாங்க” ஒரே போடாய் போட்ட பவித்ரா… கேள்வியால் முத்துவை லாக் செய்த விஜய் சேதுபதி..!

By Soundarya on தை 4, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

   

மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 10 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் பத்து போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றியடையும் போட்டியாளர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார். தற்போது டிக்கெட் டூ பினாலே தொடங்கியுள்ளது. போட்டியாளர்கள் வெறித்தனமாக விளையாடி வருகிறார்கள்.  இதில் முதல் போட்டியாளராக ரயான் டிக்கெட் டூ பினாலேவில் நுழைந்துள்ளார்.

   

 

இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, மஞ்சரி, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா மற்றும் ராணவ் ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இவர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்ற உள்ளனர். இந்த வாரம் ராணவ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.  இந்நிலையில் இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் பவித்ரா, முத்து ஜெயிக்கிறதுக்காக எல்லாரும் கூட்டணியா சேர்ந்து விளையாடுற மாதிரி எனக்கு தோணுச்சு என்று விஜய் சேதுபதியிடம் சொல்ல முத்துவை விஜய் சேதுபதி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.