3550 படிக்கட்டுகள் நடந்தே மலையேறி ஏழுமலையானை தரிசித்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்… வைரலாகும் வீடியோ..!

By Soundarya on தை 4, 2025

Spread the love

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்கள். பல மொழி படங்களில் தனது சிறப்பான நடிப்பின் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். மேலும், இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

   

தன்னுடைய தாயைப் போலவே தற்போது தென்னிந்திய திரை உலகில் கலக்க தயாராகி விட்டார். இவர் முதன்முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். அண்மையில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் தேவாரா  திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் க்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார்.

   

 

அடுத்ததாக விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்தவகையில் தற்போது இவர் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கால்நடையாக 3550 படிக்கட்டுகள் மலையேறி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் ஜான்வி கபூர்.