#image_title
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் இன்னும் மூன்று வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. இறுதி கட்டத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நெருங்கி வருவதால் எந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் அவர்களுடைய குடும்பத்தினரை வீட்டிற்குள் அனுப்பி வைத்து பிக் பாஸ் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
#image_title
அதனைப் போலவே சௌந்தர்யாவின் கிரஷ் விஷ்ணு, அருண் பிரசாத்தின் காதலி அர்ச்சனா, விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் பேச்சாளர் மகேஷ், பவித்ராவின் தோழி உட்பட ஒரு சில போட்டியாளர்கள் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர். இதனை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கொண்டாடினர். இப்படி மிகவும் மகிழ்ச்சியாக சென்றபோது எலிமினேஷன் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை ஜெஃப்ரி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து யார் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து போட்டியாளர் அன்ஷிதா நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இன்னும் பினாலே நடக்க மூன்று வாரங்களுக்குள் தான் இருப்பதால் தற்போது இறுதிக்கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் பத்து போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றியடையும் போட்டியாளர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார். தற்போது டிக்கெட் டூ பினாலே தொடங்கியுள்ளது. போட்டியாளர்கள் வெறித்தனமாக விளையாடி வருகிறார்கள். அந்தவகையில் இன்று ஒட்டுமொத்த போட்டியாளர்களும் சேர்ந்து முத்துகுமரனை டார்கெட் செய்கிறார்கள்.அப்போ முத்து மஞ்சரியை பார்த்து சகுனி வேலை பார்த்துட்டீங்க என்று திட்டுகிறார். இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சென்னை மணலி சி.பி.சி.எல். நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் குழந்தையுடன் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்ட இளம்பெண்ணைப் போலீசார் பத்திரமாக…
திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு மூத்த டாக்டர்…
ஹைதராபாத் கே.பி.எச்.பி பகுதியில் தங்கள் குழந்தையைக் கொன்றுவிட்டுப் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்குள் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களும் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்…
அகமதாபாத் கோமதிபூர் பகுதியில் நவம்பர் 10-ஆம் தேதி இரவு சிறுவர்களுக்கு இடையிலான சண்டையைத் தடுக்க முயன்ற ஒருவர் மீது கொடூரமான…
அசாம் மாநிலம் கவுகாத்தியில், அருணாப் கலிதா என்ற 12-ஆம் வகுப்பு மாணவர் தனது தாயார் சந்திராணி கலிதாவை கத்தியால் குத்திவிட்டு,…