#image_title
புத்தாண்டு வந்துவிட்டது. 2025 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அடி எடுத்து வைத்து விட்டோம். ஒவ்வொரு புத்தாண்டிற்கும் வழக்கமாக எல்லோரும் எடுக்கக் கூடியது New Year Resolution. இது ஒரு மோட்டிவேஷனான ஒரு செயலாகும். புத்தாண்டில் இருந்து நாம் ஒரு விஷயத்தை செய்ய உறுதி எடுத்துக் கொள்ளும்போது அதை அந்த வருடம் முழுவதும் கடைப்பிடிப்போம். அதனால் வாழ்க்கையில் தொழிலிலோ மற்ற பல விஷயங்களிலோ முன்னேற்றம் ஏற்படுவதற்கு ஒரு உந்துதலாக இந்த New Year Resolution பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் எடுக்கப்பட்ட டாப் 10 ட்ரெண்டிங் New Year Resolution என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.
1. உடல் பராமரிப்பு: 2025 ஆம் ஆண்டில் டயட் ஃபாலோ செய்து உடம்பை ஃபிட்டாக வைப்பேன் உடல் எடையை குறைப்பேன் என்று நினைப்பவர்கள் பலர். அப்படி இந்த வருடத்தில் பலரால் எடுக்கப்பட்ட Resolution ஆக இது இருக்கிறது.
2. பயணம்: பயணம் செய்வது யாருக்கு தான் பிடிக்காது? நம்மை புத்துணர்ச்சி செய்து கொள்வதற்கான ஒரு வழி பயணம். எப்போதும் வேலை வேலை என்று இருக்காமல் நம்மை ஒரு ரிலாக்ஸ் செய்வதற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த வருடம் பலர் Resolution எடுத்து இருக்கிறார்கள். அதிலும் மாதத்தில் ஒரு ட்ரிப் போக வேண்டும் என்றும் Resolution எடுத்திருக்கிறார்கள்.
3. புதிய பழக்கங்கள் மற்றும் திறன்கள்: அனைவருக்கும் பிடித்த ஏதாவது ஒரு பழக்கம் அல்லது செயல் இருக்கலாம். ஆனால் நம் வேலைப்பளு காரணமாக அதை மறந்து கூட போய் இருக்கலாம். இந்த புது வருடத்தில் நம் மனதிற்கும் நமக்கும் பிடித்தவனைகளை செய்ய வேண்டும். புதிய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பலரின் Resolution ஆக இருக்கிறது.
4. சேமிப்பு: பணத்தை சேமிப்பது என்பது அவசியமான ஒன்று. பலர் அதில் கவனம் செலுத்தாமல் கட்டுக்கடங்காமல் செலவு செய்திருப்பார்கள். அதனால் இந்த வருடத்தில் பணத்தை சரியான முறையில் சேமிக்க வேண்டும் மற்றும் அளவோடு செலவு செய்ய வேண்டும் பட்ஜெட்டை ஏற்படுத்தி அதன் வழியில் செலவழிக்க வேண்டும் என்று பலர் முடிவெடுத்து இருக்கிறார்கள். இந்த வருடத்தில் ட்ரெண்டிங் ஆன Resolution களில் இதுவும் ஒன்று.
5. கெட்ட பழக்கங்கள்: இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு மது குடிப்பது புகை பிடிப்பது போன்ற கெட்ட பழக்கங்கள் இருக்கிறது. ஒரு சிலர் எப்போதாவது குடிப்பார்கள். ஒரு சிலர் அடிக்கடி குடிக்கும் பழக்கத்தோடு இருப்பார்கள். இவை எல்லாமே தீயவைகள் தான். உடலுக்கு கேடு விளைவிப்பவைதான். இந்த வருடத்தில் இந்த கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும் என்று Resolution பலர் எடுத்து இருக்கிறார்கள்.
6. புத்தகங்கள் படிப்பது: புத்தகம் படிப்பது என்பது மிகவும் நல்ல ஒரு பொழுதுபோக்கு. ஆனால் பலர் அதை செய்வதில்லை. நேரம் கிடைத்தால் கூட அனைவரும் ஸ்மார்ட் போனை கையில் எடுத்துக் கொண்டுதான் செல்கிறார்களே தவிர புத்தகங்கள் பக்கம் திரும்புவதில்லை. அதனால் இந்த வருடம் புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற Resolution எடுத்ததிருக்கிறார்கள்.
7. சமையல் கற்றுக் கொள்ளுதல்: உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று. அதுவும் சமையல் செய்வது என்பது பெண்களுக்கு மட்டுமல்ல அனைவரும் செய்ய வேண்டிய ஒரு கடமை. நிறைய பேச்சிலர்கள் சமையல் செய்ய தெரியாமல் டெலிவரி ஆப் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். ஆதலால் உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். அதனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுகாதாரமான முறையில் சமைத்து சாப்பிட வேண்டும் என்று பலர் Resolution எடுத்து இருக்கிறார்கள்.
8. சரியான தூக்கம்: இன்றைய டிஜிட்டல் உலகில் எல்லோரும் போனும் கையுமாக தான் இருக்கிறார்கள். கிடைத்த நேரத்தில் கூட கண்ணுக்கு ஓய்வு அளிப்பதில்லை. இரவில் தூங்குவதற்கு படுக்கும் போது கூட கையில் போனை வைத்து நோண்டிக் கொண்டுதான் பக்கத்தில் ஃபோனை வைத்து தூங்குகிறார்கள். இரவு நேரத்தில் போனை பார்த்துவிட்டு தூங்கும் போது நம்மால் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. நன்றாக தூங்கினால் தான் அடுத்த நாள் நம்மால் சீராக இயங்க முடியும். அதனால் இந்த வருடம் நன்றாக தூங்க வேண்டும் பலர் Resolution எடுத்திருக்கிறார்கள்.
9. குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குதல் மற்றும் முக்கியத்துவம் தருதல்: இதுதான் மிக முக்கியமான Resolution என்று சொல்லலாம். பலர் வேலைப்பளுவினால் அலுவலகத்திலும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவர் அல்லது போனில் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பார்கள். குடும்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்களுக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று பலர் Resolution எடுத்திருக்கிறார்கள்.
10. டிஜிட்டல் சாதனங்களை அளவாக பயன்படுத்துவது: அடுத்ததாக மிக முக்கியமாக பார்க்கப்படுவது இந்த டிஜிட்டல் சாதனங்களில் இருந்து தள்ளி இருத்தல். மனிதர்களை ஆட்டிப்படைப்பதே இந்த டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தான். அதனால் இனி தேவை இல்லாமல் இதை பயன்படுத்தி நேரத்தை செலவிடுவதை விட நிஜத்தில் இருக்கும் உலகை ஆராய வேண்டும் என்று பலர் Resolution எடுத்து இருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…