Biggboss8: டாப் 6 போட்டியாளர்களுக்கிடையே உள்ள முரண்பாடு… ஓபனாக பேசி மோதிக்கொண்ட Contestants..!

By Soundarya on தை 15, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென அவர் விலகியதால் தற்போது கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

   

24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது ஆறு போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கும் நிலையில் பிக்பாஸ் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஏற்கனவே எலிமினேட் ஆகிய வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி ரணகளம் செய்து வருகிறார் பிக்பாஸ். பிக் பாஸ் நாக் அவுட் சுற்று மூலம் எட்டு போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில் இவர்களில் தீபக் மற்றும் அருள் இருவரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர்.

   

 

டிக்கெட் டூ பின்னாலே டாஸ்கேல் வெற்றி பெற்று நேரடியாக இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார் ரயான். தற்போது நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.  தற்போது பழைய போட்டியளார்கள் அனைவருமே வீட்டிற்குள் வந்துள்ளார்கள். தற்போது இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது.