“ஜூலை 14 முதல் கோடீஸ்வர யோகம்” குரு-சந்திரன் சேர்க்கையால் இந்த 5 ராசிகளுக்கு அடிக்கப்போகுது மெகா ஜாக்பாட்..!

By Swetha on ஆடி 11, 2026

Spread the love

ஜூலை 14ஆம் தேதி விண்வெளியில் குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் மிகவும் சக்திவாய்ந்த ‘கஜகேசரி ராஜயோகம்’ உருவாக உள்ளது என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. சந்திரன் தனது சொந்த ராசியான கடக ராசிக்குள் ஜூலை 14 அன்று நுழையும் போது, அங்கு ஏற்கனவே பயணித்துக் கொண்டிருக்கும் குரு பகவானுடன் இணைகிறார். இந்த இரண்டு சுப கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் ராஜயோகம் ஜூலை 16ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால், குறிப்பிட்ட ஐந்து ராசிகளுக்கு இது ஜாக்பாட் அடிக்கும் பொன்னான காலமாக அமையப் போகிறது.

மேஷம் மற்றும் கடகம்:
இந்த யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வழிகளில் இருந்து வருமானமும், பெரும் செல்வமும் பெருக வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உழைப்பிற்கான அங்கீகாரமும், குடும்பத்தில் சுப காரியங்களும் தடையின்றி நடக்கும். கடக ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் தங்களின் சொந்த ராசியிலேயே உருவாவதால், வாழ்க்கையில் இருந்து வந்த நீண்ட காலத் தடைகள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும் அதே நேரத்தில், வியாபாரம் மற்றும் கல்விப் பணிகளில் மட்டும் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

   

சிம்மம் மற்றும் தனுசு:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த யோகக் காலத்தில் தன்னம்பிக்கையும் தைரியமும் பன்மடங்கு அதிகரிக்கும். அரசு வேலையில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும் என்பதுடன், கல்வி மற்றும் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லக் காத்திருப்பவர்களின் கனவுகள் நனவாகும். தனுசு ராசிக்காரர்களுக்குத் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், புதிய நபர்களின் அறிமுகமும் உண்டாகும். நீண்ட நாட்களாகத் தடைபட்டு வந்த திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடி, குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும்.

   

மீன ராசி:
மீன ராசியினருக்கு இந்த கஜகேசரி ராஜயோகம் அதிர்ஷ்டத்தையும் நிதி நிலைமையில் பெரும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கக் காத்திருக்கிறது. எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படும் உங்களுக்கு, பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் நற்பெயரும் கிடைக்கும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும் அத்தோடு, சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.