Breaking: சவரனுக்கு ரூ.5,040 கூடிய தங்கம்… சவரன் ரூ.1.20 லட்சத்தை நெருங்கியது – இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

By Soundarya on மாசி 4, 2026

Spread the love

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 4) முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக இந்த வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.14,270-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.630 உயர்ந்து ரூ.14,900-க்கு விற்பனையாகிறது. திருமண விசேஷங்கள் மற்றும் சுப காரியங்கள் நடைபெற்று வரும் வேளையில், தங்கத்தின் விலை சவரன் 1.20 லட்சம் ரூபாயை நெருங்கியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.