நடிகர் சிலம்பரசன் நடித்த சிலம்பாட்டம் படம் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் டி ராஜேந்தர் பேசியதாவது, நான் எத்தனையோ காதல் படங்கள் கொடுத்துள்ளேன். ஆனால் என்னையே வியக்க வைத்த ஒரு காதல் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. காதல் படங்களுக்கு எப்பவுமே மதிப்பு இருக்கும். ரி ரிலீசில் பழைய படங்களுக்கும் மவுசு இருக்கிறது என்பதை மங்காத்தா படம் நிரூபித்துள்ளது.
அஜீத்குமார் நடித்த மங்காத்தா படத்துக்கு முன் எந்த புது படங்களும் நிற்கவில்லை. எந்த படங்களும் விற்கவில்லை. எதை வேண்டுமானாலும் என் மகனுக்காக நான் விட்டுக் கொடுப்பேன். விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிறது என்றால் எனது படத்தை ஒரு வருடம் கூட ஒத்தி வைப்பேன் என்று இயக்குனர் டி ராஜேந்தர் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
