திடீர் சரிவு..! உச்சத்தில் இருந்த தங்கம் விலை இன்று தடாலடி வீழ்ச்சி.. சவரனுக்கு ₹480 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!

By Soundarya on சித்திரை 20, 2026

Spread the love

சென்னையில் கடந்த வார இறுதியில் ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, இந்த வாரத் தொடக்கத்தில் சரிவைக் கண்டுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹480 குறைந்து, ஒரு சவரன் ₹1,14,400-க்கு விற்பனையாகிறது. அதேபோல், கிராமுக்கு ₹60 குறைந்து ₹14,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ₹280-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ₹2,80,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை இன்று குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.