தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று (ஏப். 17) ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.14,210-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,680-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (ஏப். 18) கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் கணிசமான ஏற்றத்தைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
