இனி ஒவ்வொரு மாதமும் கூடுதல் பணம்.. அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! சம்பள உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு… காலையிலேயே குட் நியூஸ்…!

By Nanthini on சித்திரை 18, 2026

Spread the love

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, அகவிலைப்படி (DA) விரைவில் 2% முதல் 4% வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயர்வு அமலுக்கு வரும்போது, அடிப்படைச் சம்பளத்திற்கு ஏற்ப ஊழியர்களின் வருவாயில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். உதாரணமாக, ₹18,000 அடிப்படை ஊதியம் பெறுவோருக்கு மாதம் ₹360 முதல் ₹540 வரையிலும், ₹29,200 பெறுவோருக்கு ₹584 முதல் ₹876 வரையிலும் கூடுதல் பலன் கிடைக்கும்.

அதேபோல், ₹56,100 ஊதியம் பெறுபவர்களின் வருமானம் ₹1,100-ஐத் தாண்டும் என்றும், ₹2.5 லட்சம் வரை அதிகபட்ச ஊதியம் பெறுவோருக்கு ₹5,000 முதல் ₹7,500 வரை கூடுதல் தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்படவுள்ள இந்த அகவிலைப்படி உயர்வு, லட்சக்கணக்கான அரசுப் பணியாளர்களின் நிதிநிலைமைக்குச் சற்று நிம்மதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.