இன்று (பிப்.16, 2026) சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை சரிவு காரணமாக, இந்திய சந்தையில் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் தங்கத்திற்கு ₹960 குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ₹120 குறைந்து ₹14,440-க்கும், ஒரு சவரன் ₹1,15,520-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை மளமளவென சரிந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி நேற்று விற்கப்பட்ட அதே விலையான ₹280-க்கே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே உள்நாட்டிலும் இந்த விலை குறைவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
