BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 திடீர் சரிவு… இல்லத்தரசிகளே உடனே கிளம்புங்க..!!

By Soundarya on பங்குனி 12, 2026

Spread the love

தமிழகத்தில் இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து சவரன் ரூ.1,20,000-க்கு கீழ் வந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,200 வரை சரிந்துள்ளதால் நகை வாங்குவோர் மத்தியில் இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை நிலவரத்தின்படி, இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,970-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,19,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த திடீர் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

   

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று (மார்ச் 12, 2026) கணிசமாகக் குறைந்துள்ளதால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.