BREAKING: சவரன் ரூ.1,12,000-ஐ தாண்டியது.. ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்து புதிய உச்சத்தில் தங்கம்.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

By Soundarya on ஆனி 15, 2026

Spread the love

தமிழ்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,880க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,680 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,12,560 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் சில்லறை வர்த்தக விலையில், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.13,860க்கு விற்பனையானது. அது இன்று கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,070க்கு விற்பனையாகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.