“நீங்கதான் உண்மையான ஹீரோ…” சற்றும் யோசிக்காமல் அலையில் குதித்த 16 வயது சிறுவன்… கடற்கரையில் சிலிர்க்க வைக்கும் சம்பவம்… வெள்ளை மாளிகையில் குவியும் பாராட்டுக்கள்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!

By Visaka on ஆடி 29, 2026

Spread the love

அமெரிக்காவில் உள்ள சாண்டா குரூஸ் கடற்கரையில் கொந்தளிப்பான ராட்சத அலைகளில் சிக்கித் தவித்த 10 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய 16 வயது காவலாளிக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாட்டின் உயரிய குடிமகன் விருதை வழங்கி கௌரவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த ஆபத்தான மீட்புப் பணியின் போது, அந்த இளைஞரின் துணிச்சலான செயலையும், அவனுடன் இணைந்து போராடிய மற்றொரு காவலாளி மற்றும் கடற்கரையில் இருந்தவர்களின் கூட்டு முயற்சியையும் சமூக வலைதளங்களில் பரவிய காணொளி மூலம் பலரும் பாராட்டி வருகின்றனர்.

https://twitter.com/udayamdigital/status/2082179561215983948/photo/1

   

இந்தச் வீரதீர செயலைப் பாராட்டி, அந்த இளம் காவலாளியையும் அவரது குடும்பத்தினரையும், காப்பாற்றப்பட்ட சிறுவனுடன் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சிறப்பிக்க உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சிறுவனின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரைப் பொருட்படுத்தாமல் போராடிய இந்த இளம் காவலாளியின் செயல் அமெரிக்கா முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பலரது பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.

   

The Indian Express