“எனக்கு எதிராக நெகட்டிவ் PR…” முன்னணி நடிகரும் அவருடைய மனைவியும் சேர்ந்து… இன்ஸ்டாகிராம் லைவில் வேதனை தெரிவித்த நடிகர் ஜோஜு ஜார்ஜ்….!!

By Devi Ramu on ஆடி 29, 2026

Spread the love

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குநருமான ஜோஜு ஜார்ஜ், தனது புதிய திரைப்படமான “வரவு” வெளியானதை அடுத்து ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் உரையாடினார். அப்போது மலையாளச் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவரும் அவருடைய மனைவியும் இணைந்து, தனக்கும் தனது திரைப்படங்களுக்கும் எதிராகப் பணம் கொடுத்துத் திட்டமிட்டு நெகட்டிவ் பிஆர் பிரசாரங்களைச் செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார். இந்தச் சதியால் தனது படங்கள் வசூல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.

எந்தவொரு நடிகரின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல் ஜோஜு ஜார்ஜ் தெரிவித்த இந்த குற்றச்சாட்டு, தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழில் ‘ஜகமே தந்திரம்’, ‘தக் லைஃப்’ போன்ற படங்களின் மூலம் பிரபலமான இவர், இதுவரை பிற நடிகர்களை விமர்சிக்காதவர் என்பதால், அந்தத் துரோகத்தைச் செய்த நடிகர் மற்றும் அவரது மனைவி யார் என்பதைத் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.