மருத்துவத்துறையில் மெகா புரட்சி… லஞ்சத்திற்கு எண்டு கார்டு… தமிழக அரசின் மாஸ்டர் பிளான்… புதிய முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்… CM விஜய்யின் அதிரடி அரசாணை அறிவிப்பு…!

By Visaka on ஆடி 30, 2026

Spread the love

தமிழ்நாட்டில் புதிய மருத்துவமனைகளைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ளவற்றை விரிவுபடுத்துவதற்கும் நீண்ட நாட்களாகத் கோரப்பட்டு வந்த ஒற்றைச் சாளர அனுமதி முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் இந்த முறையைக் கொண்டுவர வேண்டும் என இந்திய தொழிலகக் கூட்டமைப்பு மற்றும் இந்திய மருத்துவமனை நிர்வாகிகள் சங்கம் விடுத்த கோரிக்கைகளை ஏற்றுத் தமிழக அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இதன் மூலம் கட்டிட அனுமதி, சுற்றுச்சூழல் சான்றிதழ் போன்ற பல்வேறு துறைகளின் அனுமதிகளைப் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை மாறி, இனி வெறும் சில மாதங்களிலேயே வெளிப்படையான முறையில் அனுமதிகள் கிடைக்கும். மேலும், சிக்கலான நடைமுறைகளால் ஏற்பட்ட தேவையற்ற காலதாமதங்களும், முறைகேடுகளும் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, மருத்துவர்களும் புதிய முதலீட்டாளர்களும் லஞ்சம் எதுவுமின்றி எளிதாகத் தொழிலைத் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

   

இந்த அதிரடி மாற்றத்தின் மூலமாக, முறையான அனுமதியின்றி முடங்கிக் கிடக்கும் பெரிய மருத்துவமனைத் திட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும். இது தமிழக மருத்துவத்துறைக்கு ஒரு புதிய திருப்புமுனையாக அமையவிருப்பதோடு, மாநிலத்திற்குப் புதிய மருத்துவ முதலீடுகளை ஈர்த்து சுகாதாரத்துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.