அமைச்சரை குறை சொல்றீங்களே…! நீங்க மட்டும் என்ன செஞ்சீங்க…? ஒரு தடவை கூட சான்ஸ் தரல… இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு கூல் சுரேஷ் பதிலடி…!!

By Devi Ramu on ஆடி 30, 2026

Spread the love

சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித், தற்போதைய அரசில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்களது மக்களுக்கு என்ன நன்மைகளைச் செய்தார்கள் என்றும், அமைச்சர் ராஜ்மோகன் தலித் மக்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை என்றும் விமர்சித்துத் திரையுலகிலும் அரசியலிலும் விவாதத்தைக் கிளப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், இது அனைத்து மக்களுக்குமான அரசு என்றும், பேச்சுக்கு மாறாகச் செயலில் நன்மைகளைச் செய்து காட்டுவோம் என்றும் அமைதியாகத் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கூல் சுரேஷ், தலித் அமைச்சர்களைக் கேள்வி கேட்கும் பா ரஞ்சித் இதுவரை மக்களுக்கு என்ன செய்தார் என வினவியுள்ளார். வாய்ப்பு கேட்டு அவரது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் பலமுறை சென்று கெஞ்சியும் தமக்குச் சிறிய வாய்ப்பைக் கூட அவர் வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன அமைச்சரவையைக் குறை கூறுவதை விட்டுவிட்டு, சக மனிதர்களுக்கு பா ரஞ்சித் என்ன செய்தார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.