அதிமுகவை காலி செய்கிறாரா விஜய்?… தவெக அலையை வீழ்த்த இபிஎஸ் கையில் எடுத்த ‘அதிரடி’ ஆயுதம்… இளைஞர்களை கவர இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்…!

Spread the love

கடந்த 2019 முதல் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவில், சமீபத்திய 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் யாரும் எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவளிப்பது தொடர்பாக ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடுகளால், அதிமுகவின் முக்கிய முகங்களும் மூத்த நிர்வாகிகளும் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். தவெகவிற்கு ஆதரவு தராமல் திமுகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதாகக் குற்றம்சாட்டி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளும், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

இப்படியான இக்கட்டான மற்றும் சோதனையான சூழ்நிலையில், கட்சியின் சரிவைத் தடுத்து மீண்டும் கட்டமைப்பை வலுப்படுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக களம் இறங்கியுள்ளார். சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கிய மாவட்ட வாரிய ஆலோசனைக்கூட்டம், வருகிற 8-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. நேற்று செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, இன்று (சனிக்கிழமை) காலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடனும், மாலையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார். இக்கூட்டங்களில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்று வருகின்றனர்.

முன்னதாக நடைபெற்ற கூட்டங்களில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தவெகவின் அசுர வளர்ச்சியைத் தாங்கள் அரசியல் ரீதியாகக் கணிக்கத் தவறிவிட்டதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், தற்போதைய சரிவிலிருந்து மீள்வதற்காக மாவட்டந்தோறும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை உடனடியாகச் சீரமைக்கவும், புதிய தலைமுறை இளைஞர்களைக் கவரும் வகையில் அதிரடியான செயல்திட்டங்களைச் செயல்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். கட்சி நிர்வாகிகள் விலகலால் தொண்டர்கள் சோர்வடையக் கூடாது என்றும், அடிமட்டத் தொண்டர்களை அரவணைத்து கட்சியை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வதே இந்த ஆலோசனைக் கூட்டங்களின் முதன்மை நோக்கம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Visaka

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

3 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

3 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

3 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

4 மணத்தியாலங்கள் ago