BREAKING: TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியானது… எப்படி டவுன்லோட் செய்வது..?

By Nanthini on ஆடி 2, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. தேவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூலை 12ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும்.

இந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை டிஎன்பிஎஸ்சி தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. குரூப்-4 தேர்வுக்காக தேர்வர்கள் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில் தற்போது தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.