தமிழக அரசில் 1,910 வேலை.. TNPSC புதிய அறிவிப்பு.. 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

By Nanthini on ஆனி 14, 2025

Spread the love

ITI, டிப்ளமோ, 10 ஆம் வகுப்பு தகுதிக்கான ( combined Technical Services) பணி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 1910 காலி பணியிடங்களுக்கு மேற்கண்ட கல்வி தகுதியுடைய 18 வயது நிரம்பியவர்கள் ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூலை இரண்டாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக 18000 ரூபாய் முதல் 56 ஆயிரத்து 900 ரூபாய் வரையும், 21,100 ரூபாய் முதல் 67,100 ரூபாய் வரையும் வழங்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தன்னுடைய அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கு கல்வி தகுதியும் விருப்பமும் உடையவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை இரண்டாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.