குரூப்-4 தேர்வர்களே உடனே பாருங்க… TNPSC வெளியிட்ட மிக முக்கியஅறிவிப்பு ..!!

By Soundarya on ஆடி 22, 2025

Spread the love

2025  ஆம் வருடத்திற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 3935 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அனைத்து மாவட்டங்களிலும் 4922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு வினாத்தாள் வினியோகம் செய்யப்பட்டு தேர்வு நடைபெற்றது. டிஎன்பிசி தேர்வு நடைபெற்று முடிந்த இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில் தேர்வுக்கான விடை குறிப்பை டிஎன்பிஎஸ் சி வெளியிட்டுள்ளது .

டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தேர்வர்கள் விண்ணப்ப பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து பார்த்துக்கொள்ளலாம். உத்தேச விடைக்குறிப்பில் ஆட்சேபனை  எதுவும் இருந்தால் தேர்வர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.