தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவி வந்த நிலையில் அதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கு கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சற்று முன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் எனவும் அதன் பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
