“இலவசம், இலவசம்”… இனி விமான பயணிகளுக்கு இந்த உணவுகள் எல்லாம் இலவசம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 22, 2025

Spread the love

ஏர்-இந்தியா பயணிகளுக்கு விமானங்களில் இனி பொடி இட்லி மற்றும் மசால் தோசை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையிலிருந்து துபாய் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் தென் மாநில உணவுகள் இலவசமாக வழங்கப்படும். குறிப்பாக தமிழகத்தின் மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், தேங்காய் சட்னி, காரச் சட்னி, புதிதா சட்னி ஆகியவை வழங்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் பிரியாணி, மலப்பாரி சிக்கன் கறி, சிக்கன் பிம்பாப் மற்றும் வடமாநில சைவ, அசைவ உணவுகள், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உணவுகள், ஜப்பான் நாட்டு உணவுகளும் வழங்கப்படும். பயணிகள் விமான டிக்கெட் புக்கிங் செய்யும்போது சைவம் அல்லது அசைவம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். முதல் கட்டமாக சர்வதேச விமானங்களில் மட்டும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து உள்நாட்டு விமான சேவையிலும் இது வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விமான பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.