புயல் அபாயம்… தமிழகத்தில் கரையை கடக்கும்… மிக கனமழை பொளந்துகட்டப் போகுது… வந்தது அலர்ட்…!

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலைக்ககுள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் சற்று மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நகர்ந்து வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.