உலகம் முழுவதுமே ஆன்லைன் மாயமாக மாறிவிட்டது. வீட்டிலிருந்தே அனைத்து பொருட்களையும் வாங்க பல்வேறு ஆப்கள் உள்ளன. அதில் குறிப்பாக பிக் பாஸ்கெட், ஜியோ மார்ட், இந்தியா மார்ட, அமேசான், பிளிப்கார்டு போன்ற பல்வேறு ஆன்லைன் வர்த்தகதளங்களும் மற்றும் ஸ்விக்கி,சொமாட்டோ உட்பட பல்வேறு உணவு டெலிவரி நிறுவனங்களும் ஓம் டெலிவரி சேவையை செய்து வருகின்றன . இவற்றில் தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றன. காலை எழுந்ததில் ஆரம்பிக்கும் காபியில் இருந்து இரவு உண்ணும் உணவு வரை வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலமாகவே வாங்கிக் கொள்கின்றனர்.
ஆன்லைன் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு இருசக்கர வாகனம் தான் மூலதனமே,அந்த வகையில் தொழிலாளர்களுக்கு இரு சக்கர வாகனத்தை எளிதாக வாங்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்குதலின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு மானிய விலையில் இ ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
மேலும் சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆன்லைன் டெலிவரி வேலை செய்யும் 2000 பேருக்கு 4 கோடி ரூபாய் செலவில் இ ஸ்கூட்டர் வாங்கும் வகையில் 20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றும், பணிகளுக்கு இடையே ஓய்வெடுக்கும் வகையில் அறைகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் டெலிவரி ஊழியர்களுக்கு இ ஸ்கூட்டர் வாங்க தலா 20,000 மானியம் ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு ஆணையிட கோரிக்கை வைத்தார்.
வேகமாக வளர்ந்து வரும் நம் நாட்டில் தொழிலாளர்கள் நலனை கருதி மேம்படுத்த கிக்[Gig]என்று தொழிலாளர்கள் நல வாரியம் நிறுவப்பட்டுள்ளது. நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்த 2000 இணைய அடிப்படையிலான ஊழியர்களுக்கு மின்சார வாகனம் வாங்குவதற்கு ரூ.20000 மானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு தொழிலாளர் துறை இயக்குனர் ஒதுக்கியுள்ள தொகை ரூ.4 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளர். தொழிலாளர்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு புதிய மின்சார வாகனம் வாங்குவதற்காக 2000 ஊழியர்கள் பதிவு செய்யப்பட்ட கிக் தொழிலாளர்களுக்கு தலா ரூ.20000 மானியம் வழங்க 4 கோடி ஒதுக்கக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
