தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். சுமார் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் அதன் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அஜித் ரசிகர்களால் இந்த திரைப்படம் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 64 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க போவதாக உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இந்த நிலையில் இந்தியாவின் முதல் F1 டிரைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரேஸருமான நரேன் கார்த்திகேயன் அஜித்குமாரின் ரேசிங் அணியில் இணைந்துள்ளார். இதுகுறித்து அஜித்குமார், நரேனுடன் இணைந்து கார் பந்தயத்தில் ஈடுபடுவது சிறப்பு என்று அஜித்குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித்தோடு இணைவதில் மகிழ்கிறேன்” என்று நரேன் தெரிவித்துள்ளார்.
