30 நாள் கெடாத பிரம்மாண்ட கேக்… ரூ.9.27 கோடிக்கு ஆர்டர்…. நவ. 14 குழந்தைகள் தினம் ஸ்பெஷல்…. தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செம ஜாலியான சர்ப்ரைஸ்….!

Spread the love

பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதல்முறையாக பிரம்மாண்டமான இனிப்பு விருந்து வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயிலும் சுமார் 61.84 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புத் திட்டத்திற்காக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிய உணவுடன் சேர்த்து மாணவர்களுக்கு வழங்குவதற்காக 45 கிராம் எடைக் கொண்ட பிராண்டட் ‘ஸ்பாஞ்ச் ஸ்லைஸ் கேக்’ (Sponge Slice Cake) தனித்தனி கவர்களில் பேக் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளது. ஒரே சுவையாக இல்லாமல், மாணவர்கள் விரும்பி உண்ணும் வகையில் மிக்ஸ்டு ஃப்ரூட்/டூட்டி-ஃப்ரூட்டி, கிளாசிக் வெண்ணிலா, ரிச் சாக்லேட் மற்றும் வெண்ணெய்/பால் (Butter / Milk) ஆகிய 4 சுவைகளில் இக்கேக்குகள் வழங்கப்படவுள்ளன.

மாணவர்களின் உடல்நலப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடுமையான தர விதிகளைத் தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளது. கேக்குகள் மென்மையாகவும், பூஞ்சை மற்றும் கெட்ட வாடை இன்றியும் இருக்க வேண்டும். குறிப்பாக, டிரான்ஸ்-ஃபேட் (Trans-fat) மற்றும் தடை செய்யப்பட்ட செயற்கை நிறங்கள் அறவே இருக்கக்கூடாது என டெண்டரில் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடோனுக்கு வந்து சேரும்போதே குறைந்தது 30 நாட்களுக்குக் கெடாத ஆயுட்காலம் கொண்டதாக இக்கேக்குகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு கேக் கவரிலும் பிராண்ட் பெயர், சுவை, 45 கிராம் எடை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) எண், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளுடன் அரசின் லோகோவும் இடம்பெற வேண்டும். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் அனைத்துச் சுவைகளிலும் மாதிரி கேக்குகளைச் சமர்ப்பித்துத் தரச்சான்றிதழ் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த இனிப்பு விருந்து மாணவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

6 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

30 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

48 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

53 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

58 minutes ago