BREAKING: பொங்கல் பரிசை அறிவித்தது தமிழக அரசு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 31, 2025

Spread the love

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்க அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதில் ரொக்க பணம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இடம் பெறவில்லை. இந்த செய்தி தமிழக மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.