மாதம் ரூ.2000 உதவித்தொகை பெற… உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம்… சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 24, 2025

Spread the love

தமிழக அரசு ஏழை எளிய மக்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதன்படி தற்போது ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெற்றோரை இழந்து உறவினர்கள் பராமரிப்பில் வளரும் குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பதினெட்டு வயது வரை மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்புவோர் தகுதியான ஆவணங்களுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சற்று முன் அறிவித்துள்ளது.