சற்றுமுன்: விஜய்யுடன் கூட்டணி சேரும் பிரபல கட்சி?… மொத்த தென் மாவட்ட வாக்குகளும் இந்த கட்சிக்கு தான்…!

By Nanthini on ஆவணி 24, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது. இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திரை பிம்மத்தை வைத்தே அரசியல் நடக்கிறது, ஆனால் விஜய்யை மட்டும் ஏன் டார்கெட் செய்கிறார்கள் என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி உள்ளார். விஜயின் ஆட்சியில் பங்கு என்பதை வரவேற்பதாக தெரிவித்த அவர், அங்கிள் ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல என்றும் கூறியுள்ளார். தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை கொண்டிருக்கும் புதிய தமிழகம் கட்சி தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் இணைய வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது