நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மூன்று பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களுடைய படகு, மீன்கள் மற்றும் வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த வாரம் இலங்கைச் சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அதிபருடன் இந்திய மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
ஆனாலும் கூட கைது நடவடிக்கை தொடர்வது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது என்பது தொடர் வாடிக்கையாகிவிட்டது. இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
