“எங்கண்ணன் தான் அடுத்த எம்ஜிஆர்… 120 சீட்டுகளை அள்ளப்போகும் விஜய்”… 1977 எம்.ஜி.ஆர் மேஜிக் மீண்டும் திரும்புமா?… எக்ஸிட் போல் வந்த பிறகும் அடங்காத தவெகன்ஸ்….!

Spread the love

சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் பல்வேறு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பெரும்பாலான கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறினாலும், சில நிறுவனங்கள் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) சாதகமான முடிவுகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, பீப்புல்ஸ் பல்ஸ் மற்றும் நியூஸ் 18 போன்ற நிறுவனங்கள் திமுக 120 முதல் 125 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கணித்துள்ள நிலையில், மேட்ரிக்ஸ் மற்றும் ஸ்பைக் மீடியா போன்ற அமைப்புகள் அதிமுக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன.

இந்தத் தேர்தலில் முதல்முறையாகத் தனித்துப் போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்த கணிப்புகள் தான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன. பெரும்பாலான கணிப்புகள் தவெக 4 முதல் 25 இடங்கள் வரை பெறும் எனக் கூறினாலும், ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் 98 முதல் 120 இடங்கள் வரை அக்கட்சி பெறும் என அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. மற்றொரு நிறுவனமான ஸ்பைக் மீடியா, தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, தவெக 67 முதல் 91 இடங்கள் வரை பிடிக்கும் எனக் கணித்துள்ளது.

இந்த அதிரடி கணிப்புகளால் தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 1977-ல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய அரசியல் புரட்சியைப் போல, விஜய்யும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பார் என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மற்ற கருத்துக்கணிப்புகளைப் புறக்கணிக்கும் அவர்கள், ஆக்ஸிஸ் மை இந்தியா போன்ற நிறுவனங்களின் முடிவுகளே கள நிலவரத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறி, “விஜய் தான் அடுத்த முதல்வர்” என்ற முழக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது திமுக மற்றும் தவெக தரப்பினர் தத்தமது வெற்றிக் கணிப்புகளை வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் வேளையில், அதிமுக தரப்பு சற்று அமைதி காத்து வருகிறது. பல்வேறு முரண்பட்ட தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் உலாவந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் அரியணையில் அமரப்போவது யார்? என்ற கேள்விக்கு வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது அதிகாரப்பூர்வ விடை கிடைத்துவிடும். அதுவரை தமிழக அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

Nanthini

Recent Posts

இப்படியும் ஒரு மகனா?!… ஒரு நாளைக்கு 50 கி.மீ ஓட்டம்… தாயின் உயிருக்காக 12 ஜோதிர்லிங்கத்தை ஓடியே தரிசிக்கும் வாலிபர்… பாரதமே பாராட்டும் செயல்…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லால்டி தேவி என்ற பெண் மீன் சாப்பிட்டபோது எதிர்பாராதவிதமாக தொண்டையில் முள் சிக்கியது. தீவிர சிகிச்சை…

6 minutes ago

இதை பார்த்தா நெஞ்சே பதறும்… எதிர்காலம் போச்சா?… சிறுவன் கையில் போதைப்பொருள்… இணையத்தை அதிர வைத்த அதிர்ச்சி காட்சி…!!

பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் பழக்கத்தின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், கபூர்தலாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன்…

14 minutes ago

உடனே இத பாருங்க..! அதிரடி மாற்றம்… இனி இந்த கலர் தானா?… டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் அதிரடி திருப்பம்… மத்திய அரசின் புது ரூல்ஸ்…!!

இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் வைத்திருக்கும் ஓட்டுநர் உரிமங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், இரு தரப்பினருக்கும்…

22 minutes ago

அடபாவிங்களா..! மன்னிப்பு கேட்டும் கைவிடாத இளம்பெண்… காரில் லிப்ட் கேட்ட மாணவி… த.வெ.க. பிரமுகரின் பகீர் லீலை… அதிரடி வழக்குப்பதிவு…!!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவர், தனது தோழியான தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகியுடன்…

32 minutes ago

“யாரும் எதிர்பாராத திருப்பம்”…. தனுஷ் அரசியல் என்ட்ரி பின்னால் இருக்கும் மிகப்பெரிய ரகசியம் இதுதானா?….. ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட அமைச்சர் மரிய வில்சன்….!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை அம்மன் கோயில் தெரு, சிவாஜி நகர் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாகக்…

41 minutes ago

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை… சிக்கியது ரூ.1.59 கோடி…. தமிழகம் முழுவதும் பரபரப்பு….!

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் வேளையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக எழுந்த தொடர் புகார்களின்…

51 minutes ago