ஒரு கிடாயின் கருணை மனு சத்திய சோதனை போன்ற படங்களை இயக்கியவர் சுரேஷ் சங்கையா. அவரது இயக்கத்தில் உருவான படம் கெணத்தை காணோம். இந்த படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். லவ்லின் சந்திரசேகர் ராமகிருஷ்ணன் ரேச்சல் ரபேக்கா ஜார்ஜ் மரியம் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மண் சார்ந்த கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த ஒரு படமாக இது உருவாகியுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இந்த படம் விரைவில் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா இப்போது உயிருடன் இல்லை. 2024ம் ஆண்டில் மறைந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கண்ணும் கண்ணும் என்ற படத்தில் நடிகர் வடிவேலு ஒரு காமெடி காட்சியில் ஐயா என் கெணத்தை காணோம், வட்ட கிணறு வத்தாத கிணறு சார் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து அலப்பறை செய்வார். அந்த காமெடி காட்சி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது. அதை தான் இப்போது யோகிபாபு நடித்துள்ள இந்த படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் கொச்சி வைப்பின் பகுதியில், தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் உள்ளூர் கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற…
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டம் கராத் அருகே, புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட ஆறு வழி…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ரகுநாதபாளம் மண்டலம் வி. வெங்கடாயபாலம் கிராமத்தில், செல்போன் மிரட்டல் மற்றும் தொடர் தொல்லைகளால் மனவேதனை…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்ஸ்டா பிரபலம் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவை தற்போது சமூக…
திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரிடையே கட்சி பொறுப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் நாளிதழ்…
திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மாநில நிர்வாகி வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். திமுகவின்…