actor Vadivelu

நடிகர் வடிவேலு பேசிய டயலாக்…யோகிபாபு நடித்த படத்தின் டைட்டில் அதுதானா? அட இது புதுசா இருக்கே என ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

By Elango on மாசி 19, 2026

Spread the love

ஒரு கிடாயின் கருணை மனு சத்திய சோதனை போன்ற படங்களை இயக்கியவர் சுரேஷ் சங்கையா. அவரது இயக்கத்தில் உருவான படம் கெணத்தை காணோம். இந்த படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். லவ்லின் சந்திரசேகர் ராமகிருஷ்ணன் ரேச்சல் ரபேக்கா ஜார்ஜ் மரியம் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மண் சார்ந்த கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த ஒரு படமாக இது உருவாகியுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இந்த படம் விரைவில் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா இப்போது உயிருடன் இல்லை. 2024ம் ஆண்டில் மறைந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கண்ணும் கண்ணும் என்ற படத்தில் நடிகர் வடிவேலு ஒரு காமெடி காட்சியில் ஐயா என் கெணத்தை காணோம், வட்ட கிணறு வத்தாத கிணறு சார் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து அலப்பறை செய்வார். அந்த காமெடி காட்சி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது. அதை தான் இப்போது யோகிபாபு நடித்துள்ள இந்த படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.