திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் மக்கள் இடையூறு இல்லாமல் சாமி தரிசனம் செய்யும் நோக்கத்திலும் தேவஸ்தானம் பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தரிசன டிக்கெட் சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டு முன்பதிவு செய்யப்படுகிறது.
அதன்படி செப்டம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட் ஜூன் 18 நாளை முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரிசன டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய செப்டம்பர் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு இலவச தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
