விஜய் சாதனையை தட்டித்தூக்கிய கூலி.. தமிழ் சினிமாவில் இதுவே முதல்முறை..!

By Nanthini on ஆனி 17, 2025

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி கூலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதில் ரஜினியுடன் அமீர்கான் மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் இடையில் படத்திற்கான வியாபார வேலைகள் தொடங்கியுள்ளது. இதில் வெளிநாடுகளில் வெளியிடும் ஓவர்சீஸ் உரிமையை பெற பலரும் முயற்சித்து வருகிறார்கள். கடுமையாக போட்டி நிலவிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஓவர்சீஸ் உரிமைக்காக 85 கோடி வரை கொடுக்க விநியோகஸ்தர்கள் முன்வந்துள்ளனர்.

இதுவரை எந்த தமிழ் திரைப்படத்திற்கும் இவ்வளவு பெரிய விலை கொடுத்து வாங்க யாரும் முன் வந்தது கிடையாது. விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ஓவர் சீஸ் உரிமை 60 கோடி ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அதனைப் போலவே விஜய்யின் ஜனநாயகம் திரைப்படம் 65 கோடி ரூபாய் முதல் 70 கோடி ரூபாய் வரை வியாபாரம் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படியான நிலையில் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்திற்கு ஓவர்சீஸ் உரிமை விலை 85 கோடி வரை கேட்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.